விலகிய ஏ ஆர் முருகதாஸ் தளபதி 65 திரைப்படத்தினை கையில் எடுக்கப் போவது யார்?

388

தளபதி விஜய்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பட தயாரிப்பு குழுவினருக்கு ஏ ஆர் முருகதாஸ் சொன்ன ஸ்கிரிப்ட் ஒத்துப் போகாததால் ஏ ஆர் முருகதாஸ் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் தளபதி 65 திரைப்படத்தினை இயக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி, சுதா கொங்கரா, பேரரசு ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் தளபதி 65 திரைப்படத்திற்காக பேசப்பட்டன.