பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந்தா இது ? இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பாத்திங்களா ?

120

அஞ்சு அரவிந்த்…

விக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” படம் மூலமாக விஜய் பெற்ற குடும்பத்து ரசிகர்களை, இன்றுவரையிலும் தக்க வைக்க காரணம் இப்படம். குறிப்பாக பெண் ரசிகர்களை விஜய் கவர்ந்த படமும், அன்றைய தேதியில் அதிகநாள் ஓடி விஜய்க்கு வசூலில் சாதனை படைத்த படமும் இதுவே.

சில மாதங்களுக்கு முன்பு விக்ரமன் அளித்த பேட்டியில், அவர் இயக்கிய பூவே உனக்காக படத்தை பற்றி பேசியுள்ளார்.

“அப்போதே 275 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாகவெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் முதன் முதலாக நடிகர் கார்த்தியை தான் நடிக்க வைக்க நினைத்தேன். அதன் பின்னர்தான் எனக்கு விஜயை வைத்து பண்ணலாம் என தோன்றியது” என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் அவர்கள் ஒருதலையாக ஒரு ஹீரோயினை காதலிப்பார், அவரின் பெயர்தான், அஞ்சு அரவிந்த. அவர் இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2001க்கு பிறகு அவர் எந்த தமிழ் படங்களிலும் தோன்றவில்லை.

ஆனால் மலையாள படங்களில் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் ‘அவரா இது?’ என கேட்கும் அளவுக்கு செம்ம சூடாக மாறிவிட்டார் அஞ்சு அரவிந்த்.