மலையாளம் சினிமாவில் மீண்டும் ‘இந்த’ ட்ரெண்டை துவக்கி வைக்கும் மோகன்லால்!!

85

மோகன்லால்…

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, முதலில் மீண்ட திரையுலகம் மலையாள சினிமாக்கள் தான்.

மிக விரைவிலேயே தங்களது திரைப்படங்களை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட மலையாள இயக்குனர்கள் தங்களது கதைகளில் டிராமா மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் உடனான தனது அடுத்த திரைப்படத்தில் முழுநீள ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைக்களத்தில் நடிக்கவிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் பணிபுரியவுள்ள ஸ்டண்ட் குழுவினர் தங்களை முழு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, அதிகமான டெஸ்ட்களுக்குப் பிறகே இத்திரைப்படத்தில் பணிபுரிகின்றனர்.

மேலும் படப்பிடிப்புகளில் பொழுதும் அதிகமான டெஸ்டுகள் ஸ்டன்ட் குழுவினருக்கு செய்யப்பட்டு வருகிறது.