நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய ரசிகர் சமந்தாவின் savage ரிப்ளை !

525

சமந்தா…

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சமந்தாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மிகவும் அதிகம்.

னது திரைப்படங்களின் மூலமாக கவனம் ஈர்த்து வந்தவர் தற்போது சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் மரத்திற்கு கீழே நிற்கும் ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.

அந்த புகைப்படத்தின் கீழே சமந்தாவின் மிக தீவிரமான ரசிகர் ஒருவர், நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சமந்தா எனக்கு இது மிகவும் கடினமானது உன்னால் செய்ய முடியுமா nag? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமந்தா தற்பொழுது அமேசான் பிரைம் வீடியோ வில் ஒளிபரப்பாகிவரும் ஃபேமிலி மேன் சீசன்2 வெப் சீரிஸில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவர் விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.