மீண்டும் தள்ளிப்போகிறது ஜீவா-ரன்வீர் சிங்கின் ’83’ திரைப்படம் !

101

நடிகர் ஜீவா…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவர் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் 83. இதில், ரன்வீர் சிங் தீபிகா படுகோன் மற்றும் பல முன்னணி நாயகர்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய தருணத்தை பற்றியும் அதனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்து ஏப்ரலில் வெளியாக வேண்டியது ஆனால் covid-19 காரணங்களால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

இருப்பினும் இப்போது மேலும் தள்ளிப்போய் 2021ல் தான் வெளியாகும் என்ற நிலை இப்பொழுது உருவாகியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.