அக்ஷய் குமாருடன் கைகோர்த்த சூப்பர் ஹாட் கதாநாயகி…ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா!?

508

அக்ஷய் குமார்…

இந்த covid-19 காலகட்டங்களில் அக்ஷய் குமார் தனது திரைப்படம் குறித்த முடிவுகளை மிக தெளிவாக எடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாது தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள லக்ஷ்மி திரைப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

மேலும், அக்ஷய் குமார் தனது அடுத்த திரைப்படமான பெல்பாட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பினையும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே தெரியவருகிறது.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகையான நோரா ஃபேடேகி இத்திரைப்படத்தின் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் அதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தகவல் குறித்து படக்குழுவினர் எதுவும் அறிவிப்பினை வெளியிடவில்லை.