‘என் பெயர் ஆனந்தன்’ ட்ரைலர் விமர்சனம் !!

73

என் பெயர் ஆனந்தன்…

ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி மற்றும் தீபக் பரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்கிறார். மனோ ராஜா ஒளிப்பதிவும், படத்தொகுப்பை விஜய் ஆண்ட்ரூஸ்ம் செய்கிறார்கள்.

காவ்யா புரொடக்ஷன்ஸ் சார்பாக கனகா வெங்கடேசன், சவிதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் டீஸரைப் பார்க்கும்போது சினிமாவிற்குள் சினிமா எடுப்பது தான் படத்தின் மையக் கரு என்பது தெரிகிறது. ஒரு படத்தை இயக்குவதற்கு ஒரு இளைஞன் எடுக்கும் முயற்சியும், அதில் வெற்றிப்பெற அவன் சந்திக்கும் துயரங்கள் பற்றி கூறும் படமாக இருக்கும். மேலும், கலை, இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த பாணியில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இப்படம் மக்களை எந்தளவு ரசிக்க வைக்கும் என்பது படம் பார்க்கும்போது தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.