மாஸ்டர் டீசர் குறித்து Hint கொடுத்த இயக்குனர் !

76

மாஸ்டர்….

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். தளபதி திரைப்படத்தை இயக்கிய அடுத்த கணமே உலகநாயகனது திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இருப்பினும், தளபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. ஓடிடியில் ரிலீஸ் செய்யப் படாது என அனைத்து தரப்பிலும் உறுதியாக தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீடு எப்போது படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டாலும் அது ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்பதால் பட வெளியீடை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர்கள் மற்றும் டீசர்கள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு தேதி உறுதியாக அறிவிக்கப்பட்ட பின்னரே ட்ரைலர் மற்றும் டீசர்கள் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.