கொரோனாவுக்கு பின் பீச்சில் நிற்கும் நயன்தாரா ! வைரலாகும் புகைப்படம் !

117

நயன்தாரா…

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.

மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

இந்நிலையில் மலையாள படமொன்றில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

என்கிற தகவல் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிய, தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் உள்ள பீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகும் வருகின்றது.