உதயநிதி ஸ்டாலினுடன் மோதும் ஸ்டைலிஷ் வில்லன்!!

409

உதயநிதி ஸ்டாலின்…

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

பெயரிடப்படாத இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் மோதுவதற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.