பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்!!

1075

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 3 யில் வைல்ட் கார்டு மூலம் நடிகை கஸ்தூரி எண்ட்ரியாகியிருக்கிறார். அவர் வந்த முதல் நாளில் இருந்தே அதிரடியை காட்ட போட்டி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதற்கிடையே இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டுக்கான நாமினேட் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், லொஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஏற்கனவே பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் எலிமினேஷ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது யார்? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த வாரம் சாக்‌ஷி தான் எலிமினேட் ஆகப் போகிறார். காரணம், கடந்த வாரத்தில் இருந்தே அவருக்கு மக்களின் வாக்குகள் குறைந்து வருகின்றது. மேலும், லொஸ்லியா ரசிகர்களின் பேவரைட் என்பதால், அவரை பிக் பாஸ் வெளியேற்ற மாட்டார். அதே சமயம், அபிராமி குறித்து பெரிதாக எந்த புகாரும் இதுவரை எழவில்லை.

அதே சமயம், சாக்‌ஷி சீக்ரெட் ரூமுக்கு அனுப்ப படலாம், என்றும் பேச்சு அடிபடுகிறது.