தீபாவளிக்கு வெளியாகும் Adult படம் இரண்டாம் குத்து – தியேட்டருக்கு வர பயப்படும் ரசிகர்கள் !

96

இரண்டாம் குத்து….

Corona அச்சுறுத்தல் காரணமாக 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத விடுமுறை தொடங்கி இப்பவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறப்புக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டாலு தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இப்படியே போனால் தீபாவளி அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், ஆபத்பாந்தவனாக வருகிறது இரண்டாம் குத்து.

தலை எழுத்து என்று திரையரங்கு உரிமையாளர்கள் அடித்துக் கொண்டாலும் வேறுவழியில்லை. ஏனென்றால் அந்த படத்திற்கு OTT Platform-களில் கூட ஓரளவுக்கு மவுசு இருக்கிறது.

ஆனால் திரையரங்குகளுக்கு மக்கள் வர வேண்டுமே என்கிற கவலைதான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு. அப்படி மக்களை வரவேற்கும் படம் என்றால் தற்போதைக்கு மாஸ்டர், சூரரைப்போற்று மட்டுமே. ஆனால் அவர்களின் துரதிர்ஷ்டம் சூரரைப்போற்று ஏற்கனவே அமேசானில் விற்று காசு பார்த்து விட்டார்கள்.

எனவே இரண்டாம் குத்து ரிலீஸ் செய்வதை தவிர வேறு வழியில்லை. இதற்கு ஏற்றார் போல் இரண்டாம் குத்து படக்குழுவினரும் தீபாவளி ரிலீஸ் என்று கொட்டை எழுத்தில் தில்லாக விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் திரையரங்குக்கு செல்ல பயப்படுகிறார்கள் அது Corona-வால் இல்லை, அதை விட மோசமான வைரஸ் ஆன ஆபாசத்தினால் தான்.