விஜய்க்கு தூது விட்ட நயன்தாரா – No சொன்ன நடிகர் விஜய் !

167

நயன்தாரா…

விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர்.

தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வந்தார்.

அந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர். இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும்.

சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வர, ஆனால் முருகதாஸ் சொன்ன கதை அவ்வளவாக விஜய்க்கு பிடிக்கவில்லை, வேறு கதை சொன்னாலும், அதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி முருகதாஸ் அவரகளை அலைக்கழித்து கொண்டே இருந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்த முருகதாஸ், இந்த படத்தில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்து, படத்தில் இருந்து வெளியேறி விட்டார், இப்போது யார் அந்த படத்தை இயக்க போகிறார் என்று ஆவலாக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தார்கள்.

தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் அடுத்த படத்திற்கு கிட்டத்தட்ட நெல்சன் தான் இயக்குனர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

இந்தநிலையில் தளபதி65 படத்துக்கு நயன்தாரா விஜய்க்கு தூது அனுப்ப, ஆனால், அது படத்திற்கு ஹீரோயினாக நடிக்க தூது அனுப்பவில்லையாம்.

அவருடைய காதலரான விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் வாய்ப்பை தருமாறு கோரி தான் தூது அனுப்பினாரார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு விஜய் No என்று கறாராக பேசி அனுப்பிவிட்டாராம்.