“ஈஸ்வரன் வந்துட்டான்” – சிம்புவின் துறுதுறு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் டீஸர் !

76

ஈஸ்வரன்…

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்கள் முன்பு ரிலீஸாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது, அந்த படத்தின் டீசர் பிரம்ம முகூர்த்தம் கருதி சரியாக காலை 4:32 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

டீஸரில் அவ்வளவு சிறப்பாக ஒன்றும் இல்லை என்றாலும் சிம்புவின் நடிப்பு நம்மளை ஈர்க்கிறது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் எந்த படத்தின் டீசரை பார்த்த சிம்பு ரசிகர்கள், ஆஹா ஓஹோ என்று கொண்டாடி வருகிறார்கள். “இது எங்க சிம்பு தீபாவளி டா” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

தமன் இசை அமைக்க, நிதி அகர்வால் ஜோடியாக நடிக்க, காமெடிக்கு பாலசரவணன் நடிக்க, சென்டிமென்ட் காட்சிக்கு பாரதிராஜா நடிக்க, துறுதுறுவென மீண்டும் பழைய சிம்பு நடிக்க, பொங்கலுக்கு வரார் ஈஸ்வரன்.