பிக்பாஸைவிட்டு வெளியே வந்தவுடன் ரேஷ்மாவுக்கு அடித்த செம அதிர்ஷ்டம்!!

1034

ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்களில் வனிதா, மீராவுக்கு பின் மக்களால ஓரளவிற்கு வெறுக்கப்பட்டவர் என்றால் அது ரேஷ்மா தான், ஏனெனில் அவர் தான் நான் அனைவருக்கும் சமமாக இருப்பதாக கூறி, ஒருவர் மாறி ஒருவரிடம் பேசி வருவார்.

இதன் காரணமாகவே அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ரேஷ்மா இப்போது தல அஜித்தின் அடுத்த படத்தில், அதாவது தல 60-யில் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிக்பாஸில் நடிக்கும் போட்டியாளர்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அவர்கள் யாருக்கும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, உண்மையிலே இது ரேஷ்மாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.

அதே சமயம் அபிராமி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த பின்பு தான் பிக்பாஸிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.