“பாலாஜியின் காதல் அவரின் கண்ணை மறைக்கிறது” – உண்மையை போட்டுடைத்த ஆரி !

59

உண்மையை போட்டுடைத்த ஆரி….

பிக் பாஸ் வெளியிட்ட இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் Process நடந்ததை காட்டுகின்றனர். அதில் இன்றைய நாமினேஷனில் அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்கின்றனர்.

அதன் பிறகு, ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் சுசித்திராவை நாமினேட் செய்கின்றனர். அதன் பின்னர் பாலாஜியை சோம், ஆரி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர்.

பாலாஜியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை ஆரி குறிப்பிடும்போது, “பாலாஜிக்கு அவருடைய காதல் கண்ணை மறைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கம் போல் ஆரியை பாலாஜி, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் சுசித்ரா, அனிதா, பாலாஜி மற்றும் ஆரி

ஆகிய நால்வர் நாமினேஷன் பட்டியலில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.