“டேய், பேட்டிய கட்பண்றா” – பெண் தொகுப்பாளினி கேட்ட கேள்வியால் கடுப்பாகி பாதியிலேயே சென்ற இரண்டாம் குத்து இயக்குனர் !

86

சந்தோஷ் பி ஜெயக்குமார்…

கடந்த மாதம் ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகம் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருக்க, பொறுக்க முடியாமல் பொங்கினார் .

இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆ பாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.

இப்படி பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ஹாயாக ஓடி கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனரிடம் பேட்டி எடுத்த பெண் ஒருவர் “நீங்கள் பெண்களை ஒரு காட்சி பொருளாக பயன்படுத்தாமல் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுக்க முடியாதா?” என்று கேள்வி கேட்க.

உடனே காண்டான இயக்குனர் அப்போது “எந்த பெண்ணும் கிளாமராக கவர்ச்சியாக உடை அணியக் கூடாது என்று ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நீங்களே சொல்லுகிறீர்களா ? பக்குவம் இல்லாத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்,

டேய் Cut பண்ணுடா” என்று அந்த பேட்டியில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். இது குறித்து அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி தனது Twitter பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.