முதல் முறையாக டாப் ஹீரோயினுக்கு ஹீரோவாக இயக்குனர் செல்வராகவன் ! ஃபர்ஸ்ட் லுக் இதோ !

72

செல்வராகவன்….

செல்வராகவன் – தனுஷ் கூட்டணி படத்திற்காக பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும், அவர்களது ரசிகர்கள், புதுப்பேட்டை 2 படத்தை கொண்டாட ரெடியா இருக்கும் பட்சத்தில்,

செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோகிறார். இது ஒரு ஆச்சரியமான அதிர்ச்சியாக செல்வராகவன் ரசிகர்கள் கருதுகின்றனர். இவரது இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது.

அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்தால் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார்.

இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. எத்தனையோ நடிகர்களை வாட்டி வதைத்த செல்வராகவன் இப்போது எப்படி நடிப்பார் என்று ஆவலாகக் காத்து கொண்டிருக்கிறார்கள்.