“கருப்பன் குசும்புகாரன்” என்ற வசனத்தை பேசியவரா இவர் ? – உதவுவார்களா முன்னணி நடிகர்கள் ?

67

நடிகர் தவசி…

பல துணை நடிகர்கள் இன்று சோற்றுக்கு வழி இல்லாமல், இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரவை முனியம்மா கூட இப்படித்தான் இறந்து போனார். அப்படிதான் பல காமெடி படங்களில் நடித்த காமெடி நடிகர் தவசி இப்போது புற்று நோயால் அவதிப்பட்டு , சாப்பாட்டுக்கும் கஷ்ட்டபட்டு வருகிறார்.

இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பேசிய “கருப்பன் குசும்புக்காரன்” என்கிற ஒரு வசனம் மூலம் ABC என எல்லோரிடமும் சென்றடைந்தார்.

இப்படி பல அப்பாவியான அப்பாவாக கதாப்பாத்திரத்தால் தனது நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தி எல்லோரையும் சிரிக்க வைத்த இவர் இப்போது கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார்.

இப்போது அவரின் லேட்டஸ்ட் புகைபடத்தை பார்த்தவர்கள் மிகவும் அதிர்ச்சியாகி உள்ளனர். சுகர் வந்தது போல் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது சிகிச்சைக்காக தேவையான பணம் இல்லாமல் அவதிப்படுகிறார். சமீபத்தில் அவருக்கு உதவி கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போதாவது, அவருக்கு தேவையான பணத்தை கொடுக்க எந்த முன்னணி நடிகர் முன் வருவார்களா ? என்று கேள்வி எழுகிறது.