“என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியுற” – நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் Teaser !

61

நெற்றிக்கண் டீஸர்…

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் சாதாரணமானது அல்ல. பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், நிழல் ( மலையாளம்) அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனின் தயாரிப்பின் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அந்த படத்தை பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது, சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியது.

தற்போது இந்த படத்தின் Teaser ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவில் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

Teaser லுக் வெளியான கொஞ்ச நேரத்தில் “என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியுற” என்று Teaser-இல் வில்லன் பேசும் வசனத்தை ரசிகர்கள் கமெண்ட்டாக அடிக்கிறார்கள்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.