இரண்டாக பிரிந்த அண்ணாத்த டீம் : அப்போ ரிலீஸ் தேதி ?

350

அண்ணாத்த…………

விசுவாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்க உள்ளார் சிறுத்தை சிவா.அந்த வகையில்,

ஒரே நேரத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிப்பதற்காக படக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாகவும், ஒரு பிரிவினர் படப்பிடிப்பிலும்,

இன்னொரு பிரிவினர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலையையும் கவனிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டமிடல் காரணமாக படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.