“சுசித்ராவை பற்றி உங்களுக்கு தெரியாது” மோசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு முன்னாள் கணவர் கார்த்திக் பதில் !

71

பிக் பாஸ் சீசன் 4….

எல்லா சீசன் போல் இந்த சீசன் இல்லை இல்லை என்று சொல்லி வந்தாலும் பயங்கர விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 4.

பிக்பாஸ் வீட்டில் இன்னும் சுசித்ரா பிரச்சனையே ஓய்ந்தபாடில்லை அதற்குள் இன்னொரு Wild Card Entry வரபோகிறார் என்றெல்லாம் செய்திகள் வர, தற்போது அது குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ஆம், அசீம் என்னும் சீரியல் நடிகர் உள்ளே வரப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் குமார் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் Live Chat வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் “இப்போ பிக்பாஸ்ல இருக்கும் சுச்சித்ரா பற்றிய மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா?” என்று கிண்டலாக கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து,

பாசமாக தான் இருக்கிறேன். உங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது.

தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.