தமன்னாவுக்கு கல்யாணம் : மணமகன் யார் தெரியுமா?

1195

தமன்னாவுக்கு கல்யாணம்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா, கடந்த 13 அண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட தமன்னா குறித்து அவ்வபோது காதல் கிசுகிசுக்களும் வந்துக் கொண்டிருக்கிறது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இறுதியாக பிரபல நடன இயக்குநரும் நடிகர் கம் இயக்குநரான ஒருவருடன் தமன்னா கிசுகிசுக்கப்பட்டார். திருமணமாகி விவாகரத்தான அவருக்கு பேய் படத்தில் ஜோடியாக நடித்த தமன்னாவை, அவர் பேயாக காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை தமன்னா மறுத்தார். இதையடுத்து தமன்னாவின் திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டது. இதற்கும் தமன்னா மறுத்தார்.

இந்த நிலையில், தமன்னா ஒருவரை காதலிப்பதாகவும், தற்போது அவருடன் டேட்டிங்கில் இருப்பவர், அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதையும் தமன்னா மறுத்துள்ளார்.

இப்படி தொடர்ந்து தனது காதல் மற்றும் கல்யாணம் பற்றிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வரும் தமன்னா, இந்த முறை காதலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், கல்யாணம் குறித்த செய்தியை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆம், தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உண்மை தானாம். ஆனால், அது காதல் கல்யாணம் இல்லையாம். பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். தற்போது அவரது பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். தமன்னாவுக்கு ஏற்றவர் கிடைத்தவுடன் திருமணம் தானாம்.

தனது காதல் கல்யாணம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா இந்த இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.