நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் அண்மையில் வெளியான ஆடை படத்தில் கதை கருவாக நடித்திருந்தார். ஆடையில்லாமல் அவர் படத்தில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் நடிப்பு பாராட்டி பேசப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருந்த போதிலும் கலவையான விமர்சனங்களால் படம் நிற்கமுடியாமல் போய்விட்டது. இது ஒரு பக்கம் இருக்க அவர் அண்மையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து கூறினார்.
இது குறித்து அவர் பதிவிட்டுருந்த புகைப்படத்தால் சமந்தப்பட்ட கட்சியை விரும்பாதோர் அவரை திட்டி தீர்த்துள்ளனர். அதே வேளையில் இந்த பதிவை 1.19 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.