“இந்த விஷயத்தினால்தான் சித்தார்த்தை பிரிந்தேன்” ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா..!

91

சமந்தா – சித்தார்த்…

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார், என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திருமணம் ஆன பிறகும், தொடர்ச்சியாக படங்கள் வந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடித்த ஒ பேபி தெலுங்கு படம் ஹிட்டானது.

இதையடுத்து மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. இந்நிலையில் இவர் திருமணத்திற்கு முன் சித்தார்த்தை காதலித்து வந்தார் நடிகை சமந்தா.

ஆனால் நடிகர் சித்தார்தின் நடவடிக்கைகள் சரியில்லதா காரணத்தினாலும், சில கருத்து வேறுபாடு காரணத்தாலும் அவரிடம் இருந்த காதலை முறித்து கொண்டதாக கூறினார் நடிகை சமந்தா. இதனை நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சற்றும் ஓபனாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் தனது முன்னாள் காதலர் பற்றி சமந்தா பேசியது நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை, என தகவல்கள் வந்துள்ளது.