குப்பையை விட நாறும் டிவிட்டர் ! ட்ரெண்டிங்கில் சண்டை போட்டுகொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள் !

77

விஜய் – அஜித்..

சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் சண்டை போடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும் ரசிகர்கள் அதை கேட்காமல் அதை Daily Duty ஆகவே செய்து வருகின்றனர். இன்று சம்மந்தம் இல்லாமல், #CrossBreedAjith என்று Hashtag போட்டு விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நாமளும் ஒரு கை பார்ப்போம் என்று அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #CrossGenderVijayFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அஜித் ரசிகர்கள், 175K ட்விட்ஸை தாண்டி டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதற்கு? ஏன்? என்கிற கேள்வி யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் டிரெண்ட் செய்து கொண்டிருக்கும் இரு தரப்பினர் ரசிகர்களுக்கும் கூட தெரியாது. ஆனால் குப்பைத்தொட்டி விட நாறுகிறது ட்விட்டர் என்பது சரியான வார்த்தையாகும்.