சூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித்? வைரலாகும் புகைப்படம்!!

98

ஷாலினி………..

நடிகர் சூர்யா கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘நேருக்கு நேர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். கடந்த 23 ஆண்டுகளில் அவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் விஜய், மாதவன், பிரசாந்த் உள்பட ஒருசில முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த ஷாலினி, சூர்யாவுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் சூர்யாவுடன் இணைந்து ஷாலினி அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா, ஷாலினி அஜீத், ராதிகா மற்றும் ரீமா சென் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.