வாழ்த்து கூறி வாய்ப்புக்கு தூண்டில் போடும் த்ரிஷா.. கொஞ்சம் பார்த்து செய்யுங்க என கெஞ்சும் ரசிகர்கள்!

516

திரிஷா…

தமிழ் சினிமாவிற்கு வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மலையாள நடிகர் ஃபகத் பாசில்.

கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேலாக மலையாளத்தில் ஹீரோவாக நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியாவை பெங்களூர் டேஸ் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆறு மாதங்களாகவே கொரோனா பொது முடக்கத்தால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட இந்த நிலையில், தனது ஐபோனை மட்டுமே வைத்துக்கொண்டு ‘சீ யூ சூன்’ என்ற மலையாள படத்தை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளார்.

இந்த படத்திற்காக தனது வீட்டையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றி, படத்திற்கு தேவையான ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு தனது வீட்டையே மாற்றியமைத்துக் கொண்டாராம்.

இந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கிறார், ஒன்றரை மணி நேரம் அளவிற்கு ஓடக்கூடிய இந்த படத்துல மிகக்குறைந்த நடிகர் நடிகைகளை வைத்தே தயாரித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படமானது ஓடிடி தளத்தில் ரிலீசாகி மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த படத்தை பார்த்த நடிகை திரிஷா, ‘சீ யூ சூன்’ படம்தான் 2020ல் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் திரையிட வேண்டும் என ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

மனசார வாழ்த்துக்கள் கூறினாலும் நெட்டிசன்கள், திரிஷாவை வாய்ப்புக்காக தூண்டில் போடுகிறீர்களா.! என கலாய்த்து வருகின்றனர். மற்றொருபுறம், கொஞ்சம் பார்த்து செய்யுங்க என கெஞ்சும் ரசிகர்கள்.!