தளபதி 65 படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக ஜோடி போடும் பிரபல நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் விஜய், நெல்சன் கூட்டணி!

395

தளபதி 65…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

முதலில் முருகதாஸ் இயக்க இருந்த நிலையில் திடீரென இயக்குனர் மாற்றப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது தளபதி 65 படத்தை இயக்குபவர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் என தெரியவந்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் தளபதி 65 படத்திற்காக விஜய்யுடன் முதன் முறையாக தீபிகா படுகோனே ஜோடி போட உள்ளாராம்.

ஏற்கனவே தீபிகா படுகோனே தமிழில் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய கூட்டணியில் தளபதி 65 படம் உருவாவதால் படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.