இந்த வாரம் பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற போகும் இரண்டு போட்டியாளர்கள், வெளியான அதிர்ச்சி தகவல்..!

362

பிக்பாஸ் சீசன் 4 …

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மேலும் இதுவரை நடிகை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது 14 போட்டியாளர்களுடன் நிறைந்திருக்கும் பிக்பாஸ் வீடு, அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் முடித்துள்ளது. மேலும் இதனை கமல் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் வரும் வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற படுவார்கள் என கூறப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறும் பிக்பாஸ் இந்த வாரம் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.