காற்றின் மொழி வைஷ்ணவி திருமணம்: காதலரை மணந்தார்..!

379

வைஷ்ணவி…

கொரோனா ஊரடங்கு காலம், அதற்கு முந்தைய மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள தற்போது எளிமையாக நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகைகளின் திருமணங்கள் கடந்த 2 மாத்தில் மட்டும் நடந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி ராஜசேகர் திருமணமும் நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் வைஷ்ணவி.

அவரது வெள்ளந்தி சிரிப்புக்கும், வெடி பேச்சுக்கும் தனி ரசிகர் வட்டமே உள்ளது.

வைஷ்ணவி சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். தற்போது இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ள.

இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கிறார் வைஷ்ணவி. வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.