விஜய்யின் மாஸ்டரில் நடித்தால் கூட இந்த ரீச் கிடைக்காது- தளபதி படத்தில் நடிக்க மறுத்த தொலைக்காட்சி பிரபலம்!

398

புகழ்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

தற்போது இந்த படத்தில் வேறொரு காரணத்தால் நடிக்க மறுத்துள்ளார் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழ்.

அவர் ஒரு பேட்டியில், விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை.

காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு பெரிய ரீச்சை கொடுத்தது, அதுபோல ரீச் மாஸ்டர் படத்தில் நடித்தால் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஒரே நேரத்தில் இரு வாய்ப்பும் வந்ததால் என்னால் மாஸ்டரில் நடிக்க முடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.