ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

73

பிக்பாஸ்…

நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம் அவர்கள் வாக்குவாதம் செய்ய, பிக்பாஸ் வீடே ஒரே களேபரமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தின நிகழ்ச்சியில் இந்த சண்டை குறித்து ஆரி கூறியபோது, ‘ஒரு கேங்கில் இருக்கும் ஐந்து பேர் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து ஆடுவிய? அல்லது உன்னை நம்பி இந்த வீட்டில் இருப்பியா? என்று ரியோ குறித்து கூறுகிறார்.

அப்போது குறுக்கிடும் பாலாஜி, ‘இதைதான் நானும் சொன்னேன். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரே விஷயம், எல்லோருக்கும் பாசம், ரிலேஷன் வச்சு எல்லாரையும் மெண்டல் பிளாக் செய்து அவங்களே குடும்பமாக உட்கார்ந்து விளையாட போறாங்க, அதை நான் விடமாட்டேன்’ என்று கூறுகிறார்.

மேலும் பத்து நாள் ஓய்வு எடுத்தபின் எல்லாம் தெளிவாக புரிகிறது என்றும், எங்கே அடிக்க வேண்டும், எங்கே அடிக்கக்கூடாது என்று புரிகிறது என்றும் பாலாஜி கூறுகிறார். எனவே இனி அர்ச்சனா குருப்புக்கு சிம்மசொப்பனமாக பாலாஜி மாறுவார் என்பது இந்த குறும்படத்தில் இருந்து தெரிகிறது.