ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா?

104

ஏஆர் முருகதாஸ்…

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் ஒரு சில காரணங்களால் விலகிக் கொண்டார். இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி கோலிவுட் திரையுலகில் எழுந்து வந்தது.

இதனை அடுத்து தற்போது ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ’தி லயன் கிங்’ போன்ற முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி நிறுவனத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தமிழ் இயக்குனர் ஒருவர் முதல் முறையாக உலகத்தரத்தில் ஒரு லைவ்ஆக்சன் மற்றும் அனிமேஷன் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.