சூர்யா-வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ டிராப்பா? கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்!

372

வாடிவாசல்…

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்பதும் வெற்றிமாறன் சூரி நடிக்கும் படத்தை இயக்க சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சூர்யா-வெற்றிமாறன் இணையும் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்ற வதந்தி பரவியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் ஆரம்பித்த மர்ம நபர்கள் சிலர் அந்த டுவிட்டர் பக்கத்தில் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்று பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி,

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்’ என்று பதிவு செய்துள்ளார்.