ஷ்ரத்தா கபூர்
திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே 7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இந்த தகவல் கேட்டு டாப் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபாசும் முன்னணி ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
இவர் சம்பளமாக வாங்கிக்கொள்ளாமல் பட விற்பனையில் பங்கு என்ற வகையில் ரிலீசுக்கு முன்பாக ரூ.100 கோடியை தன் பங்காக பெறுகிறாராம்.