தல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் ! வைரலாகும் வீடியோ !

86

அஜித்…

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்தி கொண்டிருப்பவர் அஜித். அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார்.

படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமாரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வர, யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் அவர்களின் பொழுது போக்கிற்காக சில பொழுதுகள் ஜாலியாக இருப்பார்கள் அப்படி இருக்கையில் தல அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை போட்டு மாஸ் குத்து குத்தி உள்ளார்கள் .