வேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் !

300

தமிழ் ராக்கர்ஸ்…

பல படங்கள் சென்சார் முதற்கொண்டு பக்காவாக வைத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் Releaseக்கு காத்திருக்கிறார்கள். இருக்கும் நிலைமையை பார்த்தால் Lock Down இன்னும் Extend ஆகி கொண்டுதான் போகிறது. ஊரடங்கு தற்போதைக்கு முடியாது, அதனால் மக்கள் திரையரங்குக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சும். அதனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன. இதன் மூலம் OTT நிறுவனங்கள் புதிய Subscribers ஐ ஏற்ற முடியும்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி, OTT நிறுவனங்களுக்கும் சரி வில்லன் யார் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான். பத்து ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே தண்ணி வந்தது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.

இவர்களை முடக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, எரிக்க எரிக்க மீண்டும் வரும் Phoenix பறவை போல் வேறொரு TLD-யுடன் அடுத்த நிமிடமே வந்தார்கள்.

இப்படி மாஸ் காட்டி வந்த தமிழ்ராக்கர்ஸின் ஆட்டத்தை அடக்கியுள்ளது முன்னணி OTT தளமான அமேசான் ப்ரைம் நிறுவனம். OTTயில் வெளியாகும் படங்களை அப்படியே லவட்டி HD தரத்தில் பதிவேற்றம் செய்து OTT தளங்களுக்கும் தண்ணி காட்டியது தமிழ்ராக்கர்ஸ்.

இதனால், அமேசான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு தனியாக தொழில் நுட்ப குழு ஒன்றை அமைத்து இரவு பகலாக மூன்று மாத தீவிர முயற்சிக்கு பின்னர் இப்படியான தளங்களை அக்கு வேர், ஆணி வேராக பிச்சு எரிந்துள்ளார்கள்.

இந்த தகவல் வந்தவுடன், தமிழ்ராக்கர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ” TAMIL BLASTERS” என்ற இணையத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர் தமிழ்ராக்கர்ஸ். இது நிஜமாகவே தமிழ் ராக்கர்ஸ் குழு செய்த வேலை தானா?