Big Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் !

422

சம்யுக்தா…

பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ்

கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.

இதில், நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரி, பாலாஜி ஆகியோர் Saved என கமல் கூறினார்.

அதன் பிறகு  சோம், சனம், நிஷா காப்பாற்றப்பட்டனர். ரமேஷ், சம்யுக்தா இருவர் மட்டுமே இருந்ததால் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.

பின், சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். சம்யுக்தா நாமினேஷன் லிஸ்டில் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் அவர் வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய மகன் ரயான் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.