பிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து!

130

ரோஷ்னா அன் ராய்…

மலையாளத்தில் உருவான படம், ஒரு அடார் லவ். நடிகை பிரியா வாரியர், கண்களை சிமிட்டும் காட்சிக்காகப் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் இது. இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

படத்தை ஓமர் லுலு இயக்கி இருந்தார். ஷான் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப், ரோஷ்னா அன் ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி படமான இதற்கு கிடைத்த பப்ளிசிட்டி, அவர்களே எதிர்பார்த்திராத ஒன்று.

ஆனால், இந்தப் படம் மலையாளத்தில் கவனிக்கப்பட்ட அளவுக்கு தமிழில் வெற்றி பெறவில்லை. இதில் பயாலஜி டீச்சராக நடித்திருந்தவர், ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை அடுத்து, பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உட்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இவரும், மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த கிச்சு டெல்லஸும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். முதலில் நட்பாக பழகிய அவர்கள் பிறகு, காதலில் விழுந்தனர். இந்த காதல் பற்றிய செய்திகள் வெளியான போது இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ‘எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன் என்று சோசியல் மீடியாவில் கூறியிருந்த ரோஷ்னா, ரொமான்டிக்கான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். கிச்சு, அங்கமாலி டைரிஸ் படத்தை அடுத்து, தண்ணீர் மதன் தினன்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அஜாகஜன் தரம் என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் இவர்கள் கொச்சியில் உள்ள சர்ச்சில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமண வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.