கர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் !

115

அனுஷ்கா சர்மா…

கர்ப்பகாலத்தில் கணவர் கோஹ்லி உதவியுடன் நடிகை அனுஷ்கா சர்மா ‘சிரசாசனம்’ செய்யும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு புத்தாண்டில் குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்புகிறார்.

இதனிடையே, கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று ‘சிரசாசனம்’ செய்ய, அவருக்கு கோஹ்லி உதவும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்ட அனுஷ்கா சர்மா கூறியது: ”எனது வாழ்க்கையில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.

தலைகீழாக நின்று, கால்கள் மேலே வைத்து செய்யும் சிரசாசனம் கடினமானது. இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். தற்போது கர்ப்ப காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி செய்கிறேன்.

முன்பு சுவற்றின் உதவியால் செய்வேன். இப்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கணவர் கோஹ்லி உதவுகிறார். எனது யோகா ஆசிரியர் காணொளி மூலம் பயிற்சிகளை மேற்பார்வையிட்டார். கர்ப்ப காலத்திலும் யோகா பயிற்சிகளை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.