கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம்!

114

ஷகிலா…

ஒரு காலத்தில் மலையாள திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. மம்முட்டி-மோகன்லால் படங்களையே வசூலில் பின்னுக்கு தள்ளிய வரலாறு ஷகிலா படங்களுக்கு உண்டு.

அப்படிப்பட்ட ஷகிலாவின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுத்துள்ளார்கள். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷகிலா படம் ரிலீசாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.