“மாஸ்டர் படமும், கொரோனா இல்லாத தமிழகமும்“ : அமைச்சர் கடம்பூர் ராஜு கூறிய தகவல்!!

143

மாஸ்டர்……….

பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாவது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி தலைமையிலான நிர்வாகிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மாஸ்டர் ரிலீசுக்கு முன் கொரோனாவே இருக்காது – அமைச்சர் கடம்பூர்ராஜூ | TN Minister Kadambur Raju Talks about vijay master movie– News18 Tamil
இந்த கூட்டத்தின் போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, சிறிய பட்ஜெட் படங்களுக்கான பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது, திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை நிர்வாகிகள் முன்வைத்தனர்,.

 

பின்னர் அமைச்சர் கடம்பூர் நிகழ்ச்சியில் பேசியதாவது, மாஸ்டர் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தியேட்டருக்கு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆனால் வரும் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கொரோனா இல்லாத தமிழகம் உருவாகும் என தெரிவித்தார்.

தமிழக அரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்றும், ஒரு ஸ்கிரீன் கொண்ட பெரிய திரையரங்குகளை பல ஸ்கிரீன் கொண்ட சின்ன திரையரங்குகளாக மாற்ற அரசு ஒப்புதல் அளிக்கும் உத்தரவு விரைவில் வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.