விக்ரமின் கோப்ரா Update.. வேட்டைக்கு ரெடியாகும் சீயான் ! வைரலாகும் Latest புகைப்படம் !

106

கோப்ரா……..

எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரம் தான், ஆனால் கடந்த 10 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.

மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து வருகிறார் விக்ரம். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விக்ரம், தொடர்ந்து ஒரு ஆறு ஏழு தோல்விப் படங்கள் கொடுத்தால்கூட தற்போது 5 புது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன்,பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் படம் போன்ற படங்களும் உள்ளது.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தை பற்றிய Update ஒன்று வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங், இன்று சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஆயுதங்கள் மத்தியில் சியான் உட்க்கர்ந்திருப்பது செம்ம தோரானையாக உள்ளது.