“ஆரி என்னிடம் பேசக்கூடாத வார்த்தைகளெல்லாம் பேசிவிட்டார்” – சம்யுக்தா உருக்கம் !!

87

பிக்பாஸ்……

பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா கடந்த வாரம் வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.

இதில், நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின், சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக பேட்டியளித்த அவர், ஆரி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறும் பொழுது “ஆரி என்னிடம் பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி விட்டார். ஒரு பெண்ணை பார்த்து அப்படி கத்தலாமா. கேமரா முன் சென்று என் மீது தவறு இருந்தால் காலில் விழுந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அது இப்போது தான் தெரியும். ஆனால் அவர் மனதில் அந்த குற்ற உணர்ச்சி இருக்கும் போது ஏன் என்னிடம் வந்து பேசவில்லை. ஆனால் போட்டி முடிந்து வெளியே வந்த பிறகு எனக்கு அவர் மீது எந்த மனவருத்தமும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.