தமிழ் நடிகையின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

94

வரலட்சுமி……….

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமாரின் டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து அவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் திடீரென நேற்று இரவு முதல் ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளது

இது குறித்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் புகார் அளித்துள்ளேன். இந்த புகாருக்கு சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனது கணக்குகள் மீட்கபடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்

எனவே இன்னும் சில தினங்களுக்கு எனது கணக்கில் இருந்து வரும் பதிவுகளுக்கு ரசிகர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீட்கப்பட்டவுடன் ரசிகர்களுக்கு தகவல் அளிக்கின்றேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி’ என வரலட்சுமி சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்