பிரபல நடிகருடன் ரொமான்ஸ் இல் கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள் !

101

வாணி போஜன்…

தொலைக்காட்சி சீரியல் மூலம் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிஸி நடிகையாக கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வாணி க்ளாமர் பக்கம் திரும்பி குடும்ப பாங்கான பெண் என்ற பெயரை தக்கவைத்தும் வருகிறார். அதேசமயம் முன்னணி நடிகராக ஆகாமல் தமிழ் சினிமாவில் இருந்து நடித்து வருபவர் நடிகர் ஜெய்.

ஜெய் படங்களில் பெரும்பாலும் டபுள் மீனிங் வசனங்கள், எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகள் என பார்ப்பவர்களை நெளிய வைக்கும் காட்சிகள் அதிகம்.

அதே போல் தான் தற்போது ஜெய் மற்றும் வாணி போஜன் நடித்திருக்கும் டிரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் தொடர் உருவாகி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜன் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். இதில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 11ஆம் தேதி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.