முக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டாரா ?

459

சமந்தா…

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். ஒரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தனது சொந்த காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து விட்டாராம்.

படத்தின் கதையில் நயன்தாராவை விட முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும் செகண்ட் ஹீரோயினாகத்தான் ட்ரீட் பண்ணப்படுவோம் என்று சமந்தா உணர்ந்ததாலும் விலகியதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா விலகிய கேரக்டரில் த்ரிஷா அல்லது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.