தல அஜித் – ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா?

491

அஜித்-ஷாலினி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் என்று கூறுவதைவிட சிறந்த சினிமா ஜோடி என்றே கூறும் அளவிற்கு வாழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித்-ஷாலினி.

நட்சத்திர ஜோடிகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் அஜித்-ஷாலினி பல படங்களில் ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள்.

இன்றும் ரசிகர்கள் மத்தியில் அஜித்-ஷாலினி போன்று ஜோடி இருக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அஜித் சினிமாவை தாண்டி அதிகம் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பார்.

முன்னொரு காலத்தில் சினிமா புரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்ட அஜித், ஒரு சில கசப்பான அனுபவங்களால் அதிலிருந்து விலகி விட்டார்.

அப்படி ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டபோது தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் பிரிட்டிஷ் இளவரசர் மற்றும் இளவரசி போன்ற உடை அணிந்து வந்துள்ளனர்.

இதுவரை அதிகம் வெளிவராத அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.