நடிகர் யஷ் பிறந்தநாளில் கேஜிஎப் 2 டீசர்?

103

கேஜிஎப் 2..

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த படம் கேஜிஎப். கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேஜிஎஃப்-2 படத்தின் டீசர் யஷ்ஷின் பிறந்தநாளையொட்டி ஜனவரி 8ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த டீசர் யஷ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.